Thursday, August 28, 2008

எதிர்பார்ப்பு

நினைவுகள் நிகழ்த்தும் அற்புதங்கள்

சில நேரங்களில் நிறைவை தருவதில்லை

நினைவுகளுக்கு நிகழ்வுகளின் உதவி

தேவைப்படும் பொழுது , எதிர்பார்ப்பு

நடப்புகளை ஆக்ரமித்து கொள்கிறது

Wednesday, August 27, 2008

முரண்

எதில் ஆர்வம்

ஆழமாக

எதை நம்புகிறேன்

நிறைவாக

எதில் மூழ்குகிறேன்

முழுமையாக

எது என்னை ஏற்றுக்கொள்ளும்
அதனோடு
எது எது எது

..............................



கேள்விகள் நிறைந்த தினங்கள், கேள்விகள் மட்டுமே. பதில்கள் கிடைக்க வழி தேடும் ஈடுபாடே இல்லாமல் ஒன்றோடு இரண்டாக, ஆற்றோடு நீராக, சந்தோசம், துக்கம், அழுகை, கோபம், காதல் , கனிவு ஆகிய உணர்வுகளை காரணமே இல்லாமல் அடக்கி கொண்டு எங்கே எதற்காக எதனோடு போகிறோம் என்ற கேள்வியே இல்லாமல் கழியும் தினம் இரவும் பகலும், இந்த எழுத்தை போலவே முன்னுக்கு பின் முரணாக அர்த்தமற்றதாகி போன தின நிகழ்வுகள்.

Monday, August 25, 2008

தனிமை

உலகம் ஒன்றாக சேர்ந்து குலாவும் பொழுதும்
நினைவுகள் நிகழ்த்தும் ஓரங்க நாடகம்
மழை பெய்த நெடுஞ்சாலையில் காலணியின்றி நடக்கும்
நீள் மீளா பயணம்

எங்கிருந்தோ கேட்கும் மனதிற்கு பிடித்த பாடல்
ஆதவன் கதிரடக்கி கால் மடக்கி நிலவு முன் மண்டியிடும்
இளமாலை நேரம்
இருகரம் ஒன்றாகி உன்னவளுடன்
நீ
இருவர் ஒன்றாகும் இனிமையான
தனிமை