Monday, September 24, 2012

என்னவள்


எவ்வளவோ பேர்
இருந்தார்கள்,
இருக்கிறார்கள்,
இருப்பார்கள்,
ஆனால் என்னவள் போல்... ??
தாயின் மடியை பகிர்ந்திருக்கலாம்...
தனக்குத்தான் எனக்கில்லை என சண்டையிட்டிருக்கலாம்...
தனக்கும் எனக்குமென பங்கிட்டிருக்கலாம்...
தனக்கில்லையென்றாலும் எனக்கு மட்டும் எடுத்து வைத்திருக்கலாம்..
கை கோர்த்து பள்ளி சென்றிருக்கலாம்...
கை சேர்த்து மருதாணியிட்டுருக்கலாம்...
கை வீசி கடைத்தெருவெங்கும் நடந்திருக்கலாம்...
கை அடக்கி ஆறுதல்கள் பல தேற்றியிருக்கலாம்...
கை தட்டி பல கணங்கள் மகிழ்ந்திருக்கலாம்...
கை காட்டி வழி நடத்தியிருக்கலாம்...
கண்ணீரால் கை நனைத்து கணவனிடத்தில் இணைந்திருக்கலாம்...
மாமனாகியிருக்கலாம்...
மறுஜென்மம் நீயே தாய் என்று வேண்டியிருக்கலாம்...
இருந்திருந்தால் கூட இத்துணை நேசித்திருப்பேனா....
இல்லாமல் என்னுள்ளே இருந்து...
என்னை இயக்கும்
என்னவள்
என்
சகோதரி....