அழுத்தமான முத்தத்தோடு விடியல்
என்னைப் போல் கதிரவனும், முழித்தும் முழிக்காமல் சோம்பலுடன் அமைதியாக
என்னவளும், என்னவனும் என் மேல் விழுந்து முழுவதுமாக கலைத்த தூக்கம்
விருப்பமான அணி, விரும்பியபடி கோப்பையுடன், நாளேட்டில்
நா ருசிக்க, உடல் செரிக்க, மிதமான காலையுணவு
வீடு முதல் அலுவலகம் வரை தடையே காட்டாத போக்குவரத்து சைகை விளக்குகள்
மனமும், உடலும் அசதியடையும் நேரத்தில் முடிவடையும் அலுவலகப்பணி
பண்பலையில் அடுத்தடுத்து ஒலிபரப்பாகி மனதை வருடும் எனக்குப்பிடித்த பாடல்கள்
சிறிதும் பொருள் புலப்படாமல் போனாலும் தொடர்ந்து பேசியபடி என்னுடன் உரையாடிய இரண்டு வயது மகன்
வகுப்பின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் காலவரிசையுடன் என்னிடத்தில் சொல்லிமுடித்த மகள்
உறக்கத்திற்கு பதமான இளையராசா பாடல்கள்....
போட்டி போட்டபடி என்னை அணைத்த துயில்...
இன்று புதிதாய் பிறந்தேன் .....
No comments:
Post a Comment