Monday, January 4, 2016

ஆனந்தம்

ஆனந்தம் 
விவரிக்க, வல்லினம் மிகுந்த சொற்கள் தேடப்படும்
நிலையில்
திருத்தபடாத, திருத்த முயற்சிக்கப்படாத, திருத்தாமல் விடப்பட்டாலும் மன்னிக்கப்பட்ட தவறுகள் மறக்கப்பட்ட
நிலையில்
உறக்கம் பல மணித்துளிகள் ஒதுங்கி ஆனந்தத்தை பேரானந்தமாக்கும்
நிலையில்
நான் என்னிடமிருந்து விலகி என்னை அனுபவிக்கும்
நிலையில்
வரைமீறி, கரைகடந்து, நிறைந்து, ததும்பி, பொங்கி வழிந்து, திகட்ட திகட்ட மூச்சடைக்கும்
நிலையில் 

No comments: